ஆயத்த படிப்புப் பாடத்திட்டங்கள் Preparatory Programmers 1. சமுதாயக்கல்லூரி சான்றிதழ் பாடத்திட்டம் CCCP Community College Certificate programme

தகுதி : பள்ளிக்கல்வியை முடிக்காதவர்கள் தமிழ் / ஆங்கிலம் பேச எழுத தெரிந்தவர்கள். 15 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்று மொழி : தமிழ் / ஆங்கிலம்
காலம் : 6 மாதங்கள்

சமுதாயக்கல்லூரி சான்றிதழ் பெற்ற மாணவர்கள், இடைநிலை ஆயத்த பாடத்திட்டம் PPS சேரலாம்.

2. இடைநிலை ஆயத்த பாடததிட்டம் PPS Preparatory Programme for Secondary

தகுதி : சமுதாயக்கல்லூரி சான்றிதழ் பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்.

பயிற்று மொழி : தமிழ் / ஆங்கிலம்
காலம் : 6 மாதங்கள்

பத்தாம் வகுப்பில் தேர்ச்சியை குறைந்த பட்ச தகுதியாக கொண்ட தொழில்கல்வி பட்டய பாடத்திட்டங்களுடன் இணைந்து இடைநிலை ஆயத்தப்பாடத்திட்டம் (PPS)
சான்றிதழ் பெற்ற மாணவர்கள் மேல்நிலை ஆயத்த பாடத்திட்டம் (PPH)ல் சேரலாம்.

3. மேல்நிலை ஆயத்தப்பாடத்திட்டம் PPH Preparatory Programme for Higher Secondary

தகுதி : 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தொழில் கல்வி பட்டய பாடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

பயிற்று மொழி : தமிழ் / ஆங்கிலம்
காலம் : 1 வருடம்

இந்த மேல்நிலை ஆயத்த பாடத்திட்டத்தினை முடிந்தவர்கள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் நேரடியாக சேரலாம்.

DIPLOMA COURSES